l டெங்குவை அழிக்கும் பில் கேட்ஸ் சூப்பர் கொசுக்கள்

டெங்குவை அழிக்கும் பில் கேட்ஸ் சூப்பர் கொசுக்கள்

VIRAL NEWS STATUS
By -Banumoorthy
0

   உலகம் முழுவதும் அச்சுறுத்தும் டெங்கு, ஜிகா, சிக்கன்குனியா போன்ற கொசு மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக,
  புதிய அறிவியல் தொழில்நுட்பம் கவனம் ஈர்த்து வருகிறது. மைக்ரோசாப்ட் இணை நிறுவனர்
பில் கேட்ஸ் ஆதரவுடன், கொலம்பியாவின் மெடலின் நகரில் மிகப்பெரிய கொசு உற்பத்தி மையம் செயல்பட்டு வருகிறது. உலக கொசு திட்டம் (World Mosquito Program) நடத்தும் இந்த மையத்தில், வாரந்தோறும் கோடிக்கணக்கான கொசுக்கள் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் வாழும் பகுதிகளில் வெளியிடப்படுகின்றன.


வால்பாக்கியா பாக்டீரியாவின் அதிரடி

   இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் Wolbachia என்ற இயற்கை பாக்டீரியா. விஞ்ஞானிகள், ஏடிஸ் எஜிப்தி வகை கொசுக்களின் உடலில் இந்த பாக்டீரியாவை செலுத்துகின்றனர்.

  இதனால், டெங்கு மற்றும் ஜிகா போன்ற வைரஸ்கள் கொசுக்களின் உடலில் வளர முடியாமல் தடுக்கப்படுகிறது. அதன் காரணமாக, இந்த கொசுக்கள் மனிதர்களைக் கடித்தாலும் நோய் பரவும் அபாயம் மிகக் குறைகிறது.


இனப்பெருக்கம் மூலம் நோய் கட்டுப்பாடு

   ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இந்த கொசுக்கள் பின்னர் வெளியிடப்படுகின்றன. அவை இயற்கை கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்யும்போது, வால்பாக்கியா பாக்டீரியா அடுத்த தலைமுறைக்கும் பரவுகிறது.

  இதன் மூலம், காலப்போக்கில் ஒரு பகுதியிலுள்ள பெரும்பாலான கொசுக்களும் வைரஸை பரப்ப முடியாத வகையில் மாறுகின்றன. சில பகுதிகளில் டெங்கு பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


அடுத்த கட்டமாக ஜீன் மாற்ற கொசுக்கள்

  இந்த முயற்சியின் அடுத்த கட்டமாக, மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் உருவாக்கும் ஆய்வுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

  இந்த தொழில்நுட்பம் கொசுக்களின் இனப்பெருக்கத்தை குறைத்து, மொத்த கொசு எண்ணிக்கையையும் கட்டுப்படுத்த உதவும் என நம்பப்படுகிறது. தற்போது பல நாடுகளில் இந்த புதிய முயற்சிகள் சோதனை அடிப்படையில் நடைப்பெற்று வருகின்றன.

Post a Comment

0Comments

banumoorthy0@gmail.com

Post a Comment (0)